தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் தீ

 ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் தீ

 ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் தீ


ADDED : மே 08, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம், ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் எரிந்து நாசமாயின.

நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் ஜி.எஸ்.டி., அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஐந்தாவது தளத்தில் உள்ள 'ஏசி'யில் ஏற்பட்ட மின்கசிவால், தீ விபத்து ஏற்பட்டது.

இதையறிந்த எலக்ட்ரீஷியன்கள் காளிஸ்வரன், 24, சபரிநாதன், 24, ஆகியோர், தீயணைப்பானை பயன்படுத்தி தீயை அணைத்தனர். எனினும் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தீ விபத்தில், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் எரிந்து நாசமாயின.

இச்சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us