/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்பு மார்க்கெட்டில் தீ விபத்து
/
இரும்பு மார்க்கெட்டில் தீ விபத்து
ADDED : நவ 04, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை:ஆலந்துார், எம்.கே.என்.சாலையில், காந்தி இரும்பு மார்க்கெட் உள்ளது. இங்குள்ள காலி இடத்தில் இரும்பு, பிளாஸ்டிக் பேரல்களை உடைத்து பிரித்து, லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும்.
நேற்று இங்கு, பேரல் அடுக்கி வைத்திருந்த இடத்தில் ஆயில் கொட்டியதில், தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை, கிண்டி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.