ADDED : அக் 14, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், ஆலந்துார், எம்.கே.என்.,சாலையில் எஸ்.பி.ஐ., வங்கி இயங்கி வருகிறது. அதன் மேல் தளத்தில் ஐ.டி.எஸ்.எஸ்., எனும் பெயரில், 'சாப்ட்வேர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு திடீரென அந்த நிறுவனத்தில் கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து போலீசார் மற்றும் கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கி நிர்வாகிகள் வங்கிக்கு விரைந்து, ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.