ADDED : பிப் 06, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார் ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பில், 'புட் மால்' என்ற வளாகத்தில் 13 கடைகள் உள்ளன. இதில், 'மெட்ராஸ் காபி' என்ற கடையை நேற்று மூடி விட்டு, ஊழியர்கள் வெளியே சென்றுள்ளனர்.
மாலையில் கடைக்குள் இருந்து புகை வந்தது. சில நிமிடத்தில் தீப்பிடிக்க துவங்கியது. பக்கத்து கடைக்காரர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடத்தில், கடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
துரைப்பாக்கம், நாவலுார் நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது குறித்து, கடை மேலாளர் ஹரிஹரன், செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.