தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மொபைல் டவரில் தீ

மொபைல் டவரில் தீ

மொபைல் டவரில் தீ


ADDED : ஜூன் 03, 2025 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணலி,மணலி, சடையங்குப்பம் - பர்மா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவரது வீட்டின் மாடியில், ஏர்டெல் மற்றும் வோடபோன் அலைவரிசை உடைய 60 அடி உயர மொபைல் போன் டவர் உள்ளது.

நேற்று அதிகாலை, இந்த மொபைல் டவரின் கீழ் வைக்கப்பட்டிருந்த, கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடங்கிய பெட்டியில், திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.

தீ மளமளவென பற்றி எரிந்ததால், பீதியடைந்த அக்கம் பக்கத்தினரின் தகவலையடுத்து, மணலி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்தனர்.

எனினும், கட்டுப்பாட்டு கருவி, ஜெனரேட்டர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us