ADDED : ஜூன் 29, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்,கொடுங்கையூரில், மின் கம்பம் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.
கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 10வது பிரதான சாலையில் உள்ள மின் கம்பம், நேற்று திடீரென உடைந்து விழுந்தது. இதில், 3,000 சதுரடி காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த விபத்தால், அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது.
முல்லை நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். கொடுங்கையூர் போலீசாரின் விசாரணையில், கழிவுநீர் லாரி மின்கம்பம் மீது மோதியதில், உடைந்து விழுந்தது தெரிய வந்தது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.