தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அலங்கார பந்தல் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கில் தீ விபத்து

 அலங்கார பந்தல் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கில் தீ விபத்து

 அலங்கார பந்தல் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கில் தீ விபத்து


ADDED : மார் 05, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புழுதிவாக்கம்: திருமண அலங்காரப் பந்தல் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாகின.

புழுதிவாக்கம், ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 55. இவர், திருமணம், அரசியல் நிகழ்ச்சி போன்றவற்றுக்கு, மேடை அமைத்தல் மற்றும் அலங்காரம் செய்யும் தொழில் நடத்தி வருகிறார்.

இதற்கான பொருட்களை பாதுகாக்க, இவரது வீட்டின் அருகிலேயே கிடங்கு உள்ளது. நேற்று காலை, கிடங்கில் இருந்து திடீரென புகை வெளியேறியது. ஒரு கட்டத்தில் தீ பற்றி எரியத் துவங்கியது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து, வேளச்சேரி, திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள் வந்து, அரை மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதற்குள், கிடங்கில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு, 80 லட்சம் லட்சம் ரூபாய் என, உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us