ADDED : செப் 06, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
பழவந்தாங்கல்: பரங்கிமலை கன்டோன்மென்ட் குப்பை கிடங்கில், நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
பரங்கிமலை, கன்டோன்மென்ட் பகுதியில் சேகரிக்கும் குப்பை கழிவுகள், பழவந்தாங்கல், நேரு நெடுஞ்சாலையில் உள்ள கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு சொந்தமான, 18 ஏக்கர் பரப்பு காலி இடத்தில் கொட்டி, தரம் பிரிக்கப்படுகிறது.
நேற்று இரவு, குப்பையில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. புகைமூட்டம் சுற்று வட்டார பகுதியில் பரவியதால், பகுதி மக்கள் கண் எரிச்சலில் சிரமப்பட்டனர்.
