ADDED : பிப் 28, 2026 05:29 AM

அ நிறம் | அளவு
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கண்ணப்பா மெமோரியல் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு மூன்றாவது தளத்தில், ஊழியர்கள் நேற்று மதியம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது கரும்புகை வெளியேறியது. சில நிமிடங்களில் பால்சீலிங் எனும் பிரதான கூரையின் கீழ் அமைக்கப்படும் கூரை தீப்பிடித்து எரிந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரர் கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
