ADDED : நவ 29, 2026 08:49 PM
அ நிறம் | அளவு
புழல்: புழல், ஆண்டாள் நகரில் ‘காயலான்’ எனும் பழைய பொருட்கள் கடை மற்றும் கிடங்கு வைத்துள்ளவர் அப்துல் கரீம், 35. இங்கு, ஊழியர்களின் அறையில் இன்று (நவ.,29) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, கிடங்கு முழுதும் பரவியது. இதில், பீஹாரைச் சேர்ந்த அப்ரோஸ், 34, இலியாஸ், 19 மற்றும் ரிஸ்வான், 18, ஆகியோர் காயமடைந்தனர். மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள், பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமாயின.
காயமடைந்த மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
