/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெக்டொனால்டு' கடையில் தீ விபத்து வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
/
'மெக்டொனால்டு' கடையில் தீ விபத்து வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
'மெக்டொனால்டு' கடையில் தீ விபத்து வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
'மெக்டொனால்டு' கடையில் தீ விபத்து வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : பிப் 17, 2026 06:32 AM

வடபழனி: வடபழனி, ஆற்காடு சாலையில், பிரபல வணிக வளாக மாலில் செயல்படும் 'மெக்டொனால்டு' உணவக சமையலறையில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை சூழ்ந்ததால், மாலில் இருந்து வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வடபழனி, ஆற்காடு சாலையில் போரம் விஜயா மால் உள்ளது. இதில், திரையரங்கம், நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாலின் முதல் தளத்தில் செயல்படும் 'மெக்டொனா ல்டு' உணவகத்தில், 'ப்ரெஞ்ச் ப்ரை' உள்ளிட்ட உணவுப் பொருட்கள், 175 முதல் 185 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், எண்ணெயில் பொரித்து வழ ங்கப்பட்டு வருகின்றன.
நேற்று மதியம் 12:00 மணிக்கு, இந்த உணவக சமையலறையில் உள்ள பொரிக்கும் இயந்திரம், திடீரென அதிக வெப்பமானதால், எண்ணெய் தீ பிடித்து எரிந்தது. பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக இயந்திரத்தை மூடி, அங்கிருந்து வெளியேறினர். அங்கிருந் த தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி, தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். சமையல் அறையில் இருந்தோரும் துரிதமாக வெளியேறியதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், சமையலறையில் இருந்து கரும்புகை அதிகளவு வெளியேறியதால், முதல் தளம் முழுதும் புகை மண்டலமாக இருந்தது. தீயா ல், மாலில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு அலாரம் ஒலித்தது. இதை கேட்டு அச்சமடைந்த வாடிக்கையாளர்கள், அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.
மால் நிர்வாகத்தினர், வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதேபோல், தரைதளத்தின் 'பி1' வாகன நிறுத்தப் பகுதியில், மின் கேபிள் செல்லும் அறையிலும் தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள், அந்த தீயையும் அணைத்தனர்.

