ADDED : ஏப் 05, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
அரும்பாக்கம்: வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த மொபைல் போன் டவரில் தீ விபத்தால், அரும்பாக்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலையில் சிதம்பரம், 74, என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
மூன்று தளம் அடங்கிய குடியிருப்பு மாடியில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மொபைல் போன் டவர், வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த டவரின் மின் இணைப்பு பெட்டி அருகில் உள்ள மின் வடங்களில் நேற்று காலை, கரும்புகை வெளியேறி தீடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். மொபைல் போனுக்கு நெட்வொர்க் கிடைக்காமல், சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
