ADDED : மே 02, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொரட்டூர்,
பாடி மேம்பாலம் அருகே, டி.வி.எஸ்., நிறுவனத்தின் வளாகத்திற்குள், 'ட்ரை பாலாஜி' என்ற பெயரில், பழைய டயர் மறு உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் கிடங்கு உள்ளது. நேற்று இரவு 7:00 மணியளவில், கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து, அம்பத்துார், கொளத்துார், ஜெ.ஜெ.,நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு பகுதியில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் தீக்கிரையாகின. நேற்று விடுமுறை என்பதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.