ADDED : மார் 19, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை
இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், ஆலம்பட்டியான் என்ற டீக்கடை உள்ளது. நேற்று மாலை மின்தடை ஏற்பட்டதால், அங்கு ஜெனரேட்டர் இயக்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட மின் கசிவால், கடையில் தீ பிடித்தது. அதனால், கடையில் இருந்த ஊழியர்கள், டீ குடிக்க வந்தவர்கள் வெளியேறினர்.
தீ பிடித்ததில் அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறின. துரைப்பாக்கம், திருவான்மியூர் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.