ADDED : ஜன 19, 2025 09:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்:மதுரையை சேர்ந்தவர் முனியாண்டி. இவர், கொடுங்கையூர், தென்றல் நகர், முதல் தெருவில் பிளாஸ்டிக் வேஸ்ட் பேப்பர் கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி குடோனை பூட்டிவிட்டு, அவரது சொந்த ஊரான மதுரைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
நேற்று காலை திடீரென பிளாஸ்டிக் குடோனில் தீ பற்றியது. தீ மளமளவென பரவி, கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருள்கள் எரிய ஆரம்பித்தன. அப்பகுதியே கரும்புகையுடன் காட்சியளித்தது.
வியாசர்பாடி தீயைணப்பு துறை அதிகாரி விவேகானந்தன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து, தீயை அணைத்தனர். தீ விபத்தில், வேஸ்ட் பேப்பர் குடோன் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.