UPDATED : அக் 07, 2026 05:20 AM
ADDED : அக் 06, 2026 09:56 PM

அ நிறம் | அளவு
அம்பத்துார்: அம்பத்துார், மேனாம்பேடு, இந்திரா நகர் அருகே, சென்னை புறவழிச்சாலையின் அணுகு சாலையில், மாநகராட்சி குப்பை தொட்டிகள் உள்ளன. இதன் அருகே குவிக்கப்பட்டிருந்த மர மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் நேற்று இரவு தீப்பற்றியது.
கொழுந்துவிட்டு கொழுந்துவிட்டு எரிந்த தீயால், மேலே சென்ற மின்கம்பி தீப்பிடித்து அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில், மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இந்த தீயால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
