ADDED : மார் 03, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
ஆவடி: தீயணைப்புத் துறை சார்பில் வரும் 6ம் தேதி வரை, ஆவடியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு வினாடி -- வினா போட்டி, நடந்து வருகிறது.
ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவியருக்கு வினாடி - வினா போட்டி, நேற்று மாலை நடந்தது. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு அவடி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
