ADDED : அக் 19, 2024 12:23 AM
துரைப்பாக்கம்,
துரைப்பாக்கம், கண்ணகி நகர், இரண்டாவது அடுக்கு குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேசன், 45; நீலாங்கரை பகுதி மாநகராட்சி துப்புரவு பணியாளர். இவரது மனைவி தேவி, 41. மகன்கள் ஸ்ரீதர், 25, மகேஷ்,17.
நேற்று அதிகாலை, வெங்கடேசன் வேலைக்கு சென்றிருந்தார். காலை 8:00 மணிக்கு வீட்டின் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியது. வீட்டில் இருந்த அனைவரும், அலறியடித்து வெளியேறினர்.
தகவலறிந்த துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, 15 நிமிட போராட்டத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காஸ் சிலிண்டர்கள் இருந்த நிலையில், விரைந்து தீ கட்டுக்குள் கொண்டு வந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி, கட்டில் உள்ளிட்ட பொருட்கள், தீயில் கருகி நாசமாகின. விபத்து குறித்து, கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.