/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூட்டிய வீட்டில் தீ விபத்து குடியிருப்பு மக்கள் அணைப்பு
/
பூட்டிய வீட்டில் தீ விபத்து குடியிருப்பு மக்கள் அணைப்பு
பூட்டிய வீட்டில் தீ விபத்து குடியிருப்பு மக்கள் அணைப்பு
பூட்டிய வீட்டில் தீ விபத்து குடியிருப்பு மக்கள் அணைப்பு
ADDED : டிச 14, 2025 05:29 AM

அம்பத்துார்: அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில், ஏழு பிளாக்குகள் உள்ளன. அதில், 'சி' பிளாக்கின், ஆறாவது மாடியில் உள்ள பூட்டப்பட்ட வீட்டில் இருந்து, நேற்று இரவு கரும்புகை வெளியேறி உள்ளது. அச்சமடைந்த குடி யிருப்புமக்கள், தரைதளத்திற்கு ஓடினர்.
அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், குடியிருப்புவாசிகளே தீயணைப்பானை பயன்படுத்தி, தீயை அணைத்தனர்.
எனினும், தீ பரவி, வீட்டின் உட்கட்டமைப்பு பணிக்காக வைக்கப்பட்டிருந்த மரப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என, அம்பத்துார் போலீசார் தெரிவித்தனர்.