ADDED : ஏப் 20, 2026 10:54 PM

அ நிறம் | அளவு
செங்குன்றம்: பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீயால், விளாங்காடுபாக்கத்தில் நேற்று, சுற்றுச்சூழல் பாதித்தது.
செங்குன்றம் அருகே, விளாங்காடுபாக்கத்தில் இம்ரான் ஷெரீப் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு பூட்டியிருந்த நிலையில், நேற்று காலை திடீரென தீப்பற்றியது.
அங்கிருந்த பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வெளியே இருந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகளிலும் மளமளவென தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால், விளாங்காடுபாக்கத்தில் கரும்புகை சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதித்தது. தகவலின்பேரில், செங்குன்றம், மாதவரம், மணலி தீயணைப்பு நிலைய தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
