தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து


ADDED : செப் 29, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா நகர், கிழக்கு அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது.

இரண்டு தளம் உடைய இந்த அலுவலக கட்டடத்தில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு கரும்புகை வெளியேறியது.

பணியில் இருந்த காவலாளி வெங்கடேசன், அலுவலகத்திற்குள் நுழைந்து சோதித்தபோது, தரை தள அலுவலக அறையில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.

மின் கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், அலுவலக அறையில் இருந்த மின்சாதன பொருட்கள் மட்டும் எரிந்து சேதமடைந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us