தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீ பாதுகாப்பு பயிற்சி மக்களுக்கு அழைப்பு

தீ பாதுகாப்பு பயிற்சி மக்களுக்கு அழைப்பு

தீ பாதுகாப்பு பயிற்சி மக்களுக்கு அழைப்பு


UPDATED : ஜூன் 04, 2026 06:50 PM

ADDED : ஜூன் 04, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 06:50 PM ADDED : ஜூன் 04, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பூந்தமல்லி: பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்தில், நாளையும், நாளை மறுநாளும் இலவச தீ பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, இலவசமாக தீ பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், பூந்தமல்லியில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில், நாளையும், நாளை மறுநாளும், காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரையும் தீ பாதுகாப்பு பயிற்சி முகாம் இலவசமாக நடைபெற உள்ளது.

பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும், இதில் பங்கேற்று பயனடையலாம் என, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். விபரங்களுக்கு பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்தை 044 - 2627 4700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us