தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெட்ரோ ரயில் அலுவலகத்தில் ‘தீ’

மெட்ரோ ரயில் அலுவலகத்தில் ‘தீ’

மெட்ரோ ரயில் அலுவலகத்தில் ‘தீ’


ADDED : செப் 17, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மெரினா: மெரினா அணுகு சாலையில் கன்டெய்னரில் அமைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் தற்காலிக அலுவலகத்தில், பொருத்தப்பட்டிருந்த ‘ஏசி’ மின் கசிவால் தீ பற்றி எரிந்ததை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

மெரினா காமராஜர் சாலையில், 2ம் கட்ட பணிகள் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மெரினா அணுகு சாலையில், கன்டெய்னரில் ‘ஏசி’ வசதியுடன் கூடிய தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம், 3:00 மணியளவில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென ஏசி தீ பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர், திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மெரினா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us