UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 04:34 PM

மணலி: மணலி தீயணைப்பு வீரர் சிவா, 35, நெஞ்சுவலியால், திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா, 35, இவர், மணலி தீயணைப்பு நிலையத்தில் ஓட்டுநராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, பணியிலிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடன் பணியாற்றும் வீரர்கள், சிவாவை ஆம்புலன்ஸ் மூலம், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மணலி போலீசார் விசாரிக்கின்றனர். சிவாவிற்கு, அனுசியா, 30, என்ற மனைவியும், மகிழிசை, 8, எழில் ஆதிரா, 6, ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவா, இன்று பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில், நெஞ்சுவலியால் திடீரென உயிரிழந்த சம்பவம், தீயணைப்பு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
