/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது விபத்தில் சிக்கிய பசுவுக்கு முதலுதவி
/
பொது விபத்தில் சிக்கிய பசுவுக்கு முதலுதவி
ADDED : டிச 02, 2024 01:27 AM

அண்ணா நகர்:அண்ணா நகரில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிருக்குப் போராடிய பசு மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது.
சென்னை, அண்ணா நகர், காவல் நிலைய எல்லையில் போகன் வில்லா பார்க் எதிரே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்ட பசு ஒன்று, உயிருக்குப் போராடியது. அருகில், அதன் கன்றும் இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற, அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், பசுவிற்கு தண்ணீர் கொடுத்தார்.
பின், தொண்டு நிறுவனம் வாயிலாக, வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு பசு கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கிண்டியிலுள்ள ப்ளூ கிராஸ் அமைப்பின் கால்நடைகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் பசு ஒப்படைக்கப்பட்டது.
தாய் பசு அடிபட்டு கிடப்பதைக் கண்டு, அதன் அருகே நின்ற கன்று பரிதவித்தது, அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.