ADDED : ஏப் 25, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆடவருக்கான முதல் டிவிஷன் போட்டியில், தளபதி ஸ்டாலின் அணி, பாசின் பிரிட்ஜ் அணி இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆண்களுக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி சென்னை, ஐ.சி.எப்., மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தளபதி ஸ்டாலின் அணி, பாசின் பிரிட்ஜ் அணியை எதிர்த்துப் போட்டியிட்டது. இதில், இரு அணி எந்த விதக் கோலும் அடிக்காமல், கடைசி வரை பந்தை தட்டியவாறே முடித்ததால் போட்டி டிராவில் முடித்தது. லீக் சுற்று என்பதால், 'பெனால்டி சூட் அவுட்' வாய்ப்பும் கிடைக்கவில்லை.