/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல் டிவிஷன் கால்பந்து சாய் - தாவூத் அணிகள் மோதல்
/
முதல் டிவிஷன் கால்பந்து சாய் - தாவூத் அணிகள் மோதல்
முதல் டிவிஷன் கால்பந்து சாய் - தாவூத் அணிகள் மோதல்
முதல் டிவிஷன் கால்பந்து சாய் - தாவூத் அணிகள் மோதல்
ADDED : மே 20, 2025 01:45 AM
சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில், கடந்த மாதம் துவங்கியது.
இதில், தளபதி ஸ்டாலின், டி.பி.ஒய்.சி., அணிகள் உட்பட, 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அனைத்து அணிகளும், ஏழு போட்டிகளில் பங்கு பெறும்.
அவற்றில், எந்த அணி அதிகப் புள்ளிகள் பெறுகிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால், சாய் அணி செய்த குளறுபடியால், இந்த போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
தற்போது, சாய் அணி மீண்டும் போட்டிக்கு திரும்பியதால், ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் இன்று துவங்குகின்றன.
இன்று நடக்கும் போட்டியில், சாய் மற்றும் தாவூத் நினைவு அணிகள், கண்ணப்பர் திடல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.