ADDED : மார் 24, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு:காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், மீன் வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதும்.
அந்தவகையில், அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 45க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. சமீபமாக கடும் வெயில் நிலவி வருவதால், மீன்கள் ஆழமான பகுதியில் செல்கின்றன.
இதனால் வலையில் குறைந்தளவே சிக்குகின்றன. மீன் வரத்து குறைவாக இருந்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது.