/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடில் மீன் விலை இருமடங்கு உயர்வு
/
காசிமேடில் மீன் விலை இருமடங்கு உயர்வு
ADDED : மே 19, 2025 01:35 AM

காசிமேடு:இன விருத்தியை கருத்தில் வைத்து, ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் ஓய்வெடுக்கின்றன. சிறு படகுகள், கட்டுமரங்கள் வாயிலாவே மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால், 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கரையோர பகுதிகளில் பிடித்த மீன் வகைகள் விற்கப்பட்டன. பழவேற்காடு ஏரி மீனும் அதிகம் விற்பனைக்கு வந்தது.
வரத்து குறைவு, மக்கள் கூட்டம் அதிகரிப்பால் மீன் விலை இரண்டு மடங்கு உயர்ந்தது. பெரும்பாலான மீன் பிரியர்கள், மீன் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
விலை நிலவரம்
மீன் வகை - கிலோ (ரூ.)
வஞ்சிரம் 1,400 - 1,500
சூரை 250 - 300
சின்ன பாறை 200 - 300
பாறை 600 - 800
கொடுவா 700 - 800
சங்கரா 600 - 700
பர்லா 250 - 300
கலவா 600 - 700
சின்ன நெத்திலி 200 - 300
கடல் விரால் 600 - 700
மத்தி 200 - 300
இறால் 400 - 500
நண்டு 500 - 700