/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி மீன்விலை இரு மடங்கு உயர்வு
/
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி மீன்விலை இரு மடங்கு உயர்வு
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி மீன்விலை இரு மடங்கு உயர்வு
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி மீன்விலை இரு மடங்கு உயர்வு
ADDED : ஏப் 21, 2025 02:37 AM

காசிமேடு:மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் ஆண்டுதோறும், 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் கடந்த 15ம் தேதி துவங்கியது. வரும் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் இருக்கும்.
தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் துாத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 20 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் உள்ளன. சென்னை காசிமேட்டில், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இருப்பினும் 15க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கொண்டு, கரை ஓரமாக மீன் பிடித்து பழைய மீன் ஏலக்கூடத்தில் விற்பனை கொண்டு வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால், மீன் விலை இரு மடங்காக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.

