தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காசிமேடில் மீன் விலை சரிவு

காசிமேடில் மீன் விலை சரிவு

காசிமேடில் மீன் விலை சரிவு


ADDED : செப் 29, 2025 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2025 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காசிமேடு: புரட்டாசி மாதத்தில் அசைவம் உட்கொள்வதை பெரும்பாலானோர் தவிர்ப்பதால், காசிமேடு மீன் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது.

காசிமேடு மீன்பிடி துறைமுக சந்தையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கரை திரும்பின; மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது.

அதேநேரம், புரட்டாசி மாதத்தில் அசைவம் உட்கொள்வதை பெரும்பாலானோர் தவிர்ப்பதால், மீன் வாங்க மக்கள் கூட்டமின்றி, சந்தை வெறிச்சோடியிருந்தது. இதனால், வஞ்சிரம், சீலா, சங்கரா, இறால், கடம்பா, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலை குறைந்திருந்தது.

மீன் விலை நிலவரம்

வகை கிலோ (ரூ.)

வஞ்சிரம் 800 - 900

கறுப்பு வவ்வால் 400 - 600

வெள்ளை வவ்வால் 800 - 900

ஐவவ்வால் 900 - 1,000

பாறை 400 - 600

கடல் விரால் 400 - 450

சங்கரா 300 - 400

தும்பிலி 150 - 200

கனாங்கத்த 150 - 200

கடம்பா 200 - 250

நெத்திலி 200 - 250

வாளை 50 - 70

இறால் 200 - 300

டைகர் இறால் 900 - 1,000

நண்டு 200 - 300

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us