/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்களின் விலை சரிவு களைகட்டிய விற்பனை
/
மீன்களின் விலை சரிவு களைகட்டிய விற்பனை
ADDED : பிப் 23, 2026 05:46 AM

காசிமேடு: காசிமேடு மீன் சந்தையில் மீன்களின் விலை சரிந்ததால், விற்பனை களைகட்டியது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நேற்று அதிகாலை கரை திரும்பின. அதேநேரம், மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர். சமீபமாக மீன்களின் வரத்து குறைந்திருந்த நிலையில், விலை உயர்வாக இருந்தது.
வழக்கத்திற்கு மாறாக, நேற்று பெரிய மற்றும் சிறிய ரக மீன்களின் வரத்து அதிகம் இருந்தது. குறிப்பாக வஞ்சிரம், கேரை, பாறை, சூரை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து விற்பனையானது. இதனால், மக்கள் போட்டி போட்டு பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.

