/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு
/
வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு
ADDED : மார் 24, 2025 02:08 AM
காசிமேடு:காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், மீன் வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதும்.
அந்தவகையில், நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 45க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. சமீபமாக கடும் வெயில் நிலவி வருவதால், மீன்கள் ஆழமான பகுதியில் செல்கின்றன. இதனால் வலையில் குறைந்தளவே சிக்குகின்றன. மீன் வரத்து குறைவாக இருந்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது.
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 850 - 900
வெள்ளை வவ்வால் 1,200
கறுப்பு வவ்வால் (சிறியது) 600
கறுப்பு வவ்வால் (பெரியது) 700
பாறை 400 - 500
சங்கரா 400 - 450
சீலா 400 - 500
நெத்திலி 300 - 350
கானாங்கத்த 150 - 200
நண்டு 300
இறால் 350 - 400
டைகர் இறால் 1,100