ADDED : அக் 06, 2025 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு: காசிமேடில் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலை விறுவிறுவென உயர்ந்தது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், புரட்டாசி மாதம் எதிரொலியால், கடந்த வாரங்களில் மீன்களின் விலை சற்று குறைவாக இருந்தது.
இந்த நிலையில், காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பெரும்பாலானவை, நேற்று கரை திரும்பவில்லை. 20க்கும் குறைவான விசைப்படகுகளே கரை திரும்பின. அவற்றிலும் மீன்வரத்து குறைவாகவே இருந்தது.
அதேநேரம், அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், மீன் விலை அதிகரித்தது. அதிகாலை மீன் வாங்க வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.