/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன் வரத்து குறைவால் காசிமேடில் விலை உயர்வு
/
மீன் வரத்து குறைவால் காசிமேடில் விலை உயர்வு
ADDED : நவ 03, 2025 01:49 AM

காசிமேடு: காசிமேடில் மீன்வரத்து குறைந்ததால் விலை இருமடங்கு உயர்ந்தது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க, அதிகாலை முதலே மக்கள் அலைமோதினர். அதே நேரம் சீதோஷ்ண நிலையால், மீன்கள் சரிவர கிடைக்காததால், வரத்து குறைந்திருந்தது. வழக்கத்தை விட மீன் விலை உயர்ந்து காணப்பட்டது.
இருந்தும் பொதுமக்கள் பேரம் பேசி மீன் வகைகளை வாங்கி சென்றனர்.
மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 1,100 - 1,300 கறுப்பு வவ்வால் 600 - 700 வெள்ளை வவ்வால் 1,100 - 1,200 ஐ வவ்வால் 1,400 - 1,500 பாறை 500 - 600 கடல் விரால் 600 - 700 சங்கரா 400 - 500 சீலா 500 - 700 தும்பிலி 200 - 300 கனாங்கத்த 200 - 300 கடம்பா 300 - 400 நெத்திலி 300 - 350 வாளை 100 - 150 இறால் 500 - 600 டைகர் இறால் 1,000 - 1,200 நண்டு 400 - 500 வரி நண்டு 500 - 600

