தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காசிமேடில் மீன் விலை கிடுகிடு உயர்வு

 காசிமேடில் மீன் விலை கிடுகிடு உயர்வு

 காசிமேடில் மீன் விலை கிடுகிடு உயர்வு


ADDED : பிப் 09, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காசிமேடு: காசிமேடில் வரத்து குறைந்ததால், மீன் விலை இருமடங்கு உயர்ந்து விற்பனையானது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா கூட்டம் போல் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் என, அதிகாலை முதலே மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் வருவர்.அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அதிகாலை பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் காசிமேடிற்கு வந்தனர்.

ஆனால், மீன் பிடிக்க சென்ற 40க்கும் குறைவான விசைப்படகுகளே கரை திரும்பின. அதிலும், கானங்கத்த மீன் வகையே அதிக வரத்து இருந்தது.

மற்ற மீன்வகைகள் குறைவாகவே கிடைத்தன. இதனால் காசிமேடு மட்டுமின்றி வெளி மீன் சந்தைகளிலும் மீன் வாங்க வந்தவர்கள், ஏமாற்றமடைந்தனர்.

மீன் விலை நிலவரம்

வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 1,200 ------ 1,500 வெள்ளை வவ்வால் 1,200 - 1,300 ஐ வவ்வால் 1,500 - 1,900 பாறை 500 - 600 சங்கரா 450 - 500 கடல் விரால் 600 - 700 கானங்கத்த 200 - 300 கடம்பா 500 - 600 நண்டு 400 - 500 வரி நண்டு 600 - 700 இறால் 350 - 400



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us