sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சாலையை ஆக்கிரமிக்கும் மீன் கடைகள்: மாற்று இடம் தந்தும் வியாபாரிகள் கறார்

/

 சாலையை ஆக்கிரமிக்கும் மீன் கடைகள்: மாற்று இடம் தந்தும் வியாபாரிகள் கறார்

 சாலையை ஆக்கிரமிக்கும் மீன் கடைகள்: மாற்று இடம் தந்தும் வியாபாரிகள் கறார்

 சாலையை ஆக்கிரமிக்கும் மீன் கடைகள்: மாற்று இடம் தந்தும் வியாபாரிகள் கறார்


ADDED : ஜன 26, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 26, 2026 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், 9.78 கோடி ரூபாய் செலவில் நவீன அங்காடி கட்டப்படும் நிலையில், மாற்று இடம் வழங்கியும், சாலையை ஆக்கிரமிக்கும் மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெரு மார்க்கெட் பகுதியில், மீன், பழம், காய்கறி, இறைச்சி மற்றும் பலசரக்கு கடைகள் அடங்கிய வளாகம் செயல்பட்டு வந்தது.

இந்த வளாகம் முழுதும் துார்ந்து போய், பாழடைந்த நிலையில் காட்சியளித்தது. இதையடுத்து, அந்த இடத்தில் நவீன அங்காடி அமைப்பதற்கு 9.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதில், 120 மீன் கடைகள்; 20 பழக்கடைகள்; 80 காய்கறி கடைகள், 48 பலசரக்கு கடைகள், 32 இறைச்சி கடைகள் என 30,000 சதுர அடி பரப்பளவில 300 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

கட்டுமான பணி காரணமாக, இங்கு கடை வைத்திருந்த மீன் வியாபாரிகளுக்கு, எண்ணுார் விரைவு சாலையில் உள்ள 'அம்மா' உணவகம் அருகே, அரசு சார்பில் தற்காலிக ஷெட் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

ஆனால், மீன் வியாபாரிகள் பெரும்பாலானோர் அங்கு இடம் பெயராமல், எண்ணுார் விரைவு சாலை - பட்டினத்தார் கோவில் தெருவிலேயே மீன் கடைகள் அமைத்துள்ளனர். இதனால், அவ்வழியே போக்குவரத்துக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

ஷெட் அமைக்கப்பட்ட இடங்களுக்கு மக்கள் வருவதில் சிக்கல் உள்ளது. வியாபாரம் பாதிக்கப்படுவதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us