/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படகை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி
/
படகை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி
ADDED : அக் 30, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு: பழவேற்காடு, கூனங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தேசப்பன், 50; மீனவர். இஸ்ரவேல் குப்பம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது பைபர் படகு, புயல் காரணமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
நேற்று காலை இதையறிந்த தேசப்பன், அதை மீட்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
சக மீனவர்கள் அவரை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் உயிரிழந்தது தெரிய வந் தது.

