/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது
ADDED : பிப் 09, 2025 10:10 PM
சென்னை:கொடுங்கையூர், கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அந்த வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல், 34, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், எண்ணுாரைச் குணசேகரன், 41, தனகோபால், 31, ராயபுரம் ராஜேஷ், 38, வியாசர்பாடி ஷ்யாம்சுந்தர், 35, ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.
மேலும், புழல், புத்தகரம் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த 626 மதுபாட்டில்கள், 120 பீர்பாட்டில்கள் மற்றும் 746 புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் ஐந்து மொபைல் போன்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.