/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரைகள் கடத்திய ஐவர் கைது
/
போதை மாத்திரைகள் கடத்திய ஐவர் கைது
ADDED : ஜூலை 25, 2025 12:26 AM
நீலாங்கரை :இ.சி.ஆரில் உள்ள கடற்கரை விடுதிகளில், போதை மாத்திரை சப்ளை செய்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
இ.சி.ஆர்., கொட்டிவாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு, நீலாங்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேரை பிடித்தனர்.
அவர்களது பையில், 500 எண்ணிக்கையில் போதை மாத்திரைகள் இருந்தன. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், வெளி மாநிலத்திலிருந்து மாத்திரைகள் கடத்தி வந்து, பனையூர், கானத்துார் பகுதியில் உள்ள கடற்கரை விடுதிகளில் தங்கும் இளைஞர்களுக்கு சப்ளை செய்வது தெரிந்தது.
அதன்படி வழக்கு பதிவு செய்து, பாலவாக்கத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா, 24, வெங்கடேசன், 23, ஆகாஷ், 21, அஜித்குமார், 20, கணேஷ், 21, ஆகியோரை கைது செய்தனர். 500 போதை மாத்திரைகள், இரண்டு மொபைல் போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.