ADDED : மே 27, 2025 11:54 PM
புளியந்தோப்பு :கொடுங்கையூர், சேலவாயில் பகுதியைச் சேர்ந்தவர் 'ஸ்பீடு' சஞ்சய் என்கிற சுகுமார், 23; சரித்திர பதிவேடு ரவுடி. இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், புளியந்தோப்பு ஆடுதொட்டி பின்புறம் உள்ள வ.உ.சி நகருக்கு நண்பருடன் சென்றுள்ளார்.
அப்போது வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 3வது தெருவில் வசிக்கும் 'பாவாடை' சஞ்சய், 18, என்பவரும் அங்கே நண்பர்களுடன் இருந்தார். அப்போது இருதரப்பு இடையே வீண்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர். இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ‛பாவாடை' சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், சுகுமாரை வெட்டிய புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 24, கோகுல்நாத், 25, விக்னேஷ், 26, ஆகியோரை கைது செய்தனர். அதேபோல, எதிர் தரப்பில் சுகுமார், 23, சூர்யா, 20, என, இருவர் கைது செய்யப்பட்டன.