/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் கட்டுமான பணியால் இடிந்து விழுந்த ஐந்து வீடுகள்
/
தனியார் கட்டுமான பணியால் இடிந்து விழுந்த ஐந்து வீடுகள்
தனியார் கட்டுமான பணியால் இடிந்து விழுந்த ஐந்து வீடுகள்
தனியார் கட்டுமான பணியால் இடிந்து விழுந்த ஐந்து வீடுகள்
ADDED : பிப் 06, 2024 11:24 PM

பெருங்குடி:சென்னை பெருங்குடியில், தனியார் கட்டுமான நிறுவனம் தோண்டிய பள்ளத்தால், அருகில் இருந்த ஐந்து வீடுகள் இடிந்து விழுந்தன.
பெருங்குடி, பர்மா காலனி, திருவள்ளுவர் நகரில் தனியார் நிறுவனம் நான்கு அடுக்கு குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது, அருகில் இருந்த ஐந்து வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. சத்தம் கேட்டு, வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து, ஐந்து வீடுகளும் இடிந்து விழுந்தன. அருகில் இருந்த மேலும் சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
புதிய கட்டுமானத்துக்காக பள்ளம் தோண்ட துவங்கியது முதல், அருகில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து கட்டுமான நிறுவனத்திடம் முறையிட்டும், கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தபோது சுவர்கள் இடிந்து, வீடுகளும் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இடிந்த வீடுகளை மீண்டும் கட்டி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்த சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிப்பு குறித்து கணக்கிட்டு சென்றனர்.

