UPDATED : அக் 05, 2026 01:28 AM
ADDED : அக் 05, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
எம்.கே.பி.: எம்.கே.பி., நகர் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கார்த்திகேயன், 57. இவர், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எம்.கே.பி., நகர், எஸ்.ஏ., காலனி ஏழாவது தெருவில் மது அருந்தி கொண்டிருந்த கும்பலை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கார்த்திகேயனை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கையால் நெஞ்சுப்பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.
கார்த்திகேயன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.கே.பி.,நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ், 27, அரவிந்த், 24, பார்த்திபன், 26, சையது அபுதாஹிர், 29, சுபாஷ், 29, ஆகியோரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
