ADDED : அக் 08, 2024 12:30 AM

அ நிறம் | அளவு
சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகம், 160 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்தாண்டு பெய்த பருவமழையின்போது, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் தேங்கிய மழைநீரை, ஒரே நேரத்தில் வெளியேற்றியதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
மழைநீரை முறையாக கையாள கட்டமைப்பு அமைக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம், ரேஸ் கோர்ஸ் இடத்தை தமிழக அரசு மீட்டது. இதையடுத்து, வரும் பருவமழையின்போது, வளாகத்தில் தேங்கும் மழைநீரை, அங்கே சேமிக்கும் வகையில், 75 சென்ட் பரப்பு, 10 மீட்டர் ஆழம் வீதம், ஐந்து குளங்கள் வெட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான பணி நேற்று துவங்கியது.
இதன்வாயிலாக, பருவமழையின்போது சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்காத வகையில், ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் மழைநீரை சேமிக்க முடியும் என, அதிகாரிகள் கூறினர்.
