/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிப்பறி திருடர்கள் ஐந்து பேர் கைது
/
வழிப்பறி திருடர்கள் ஐந்து பேர் கைது
ADDED : நவ 17, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, நவ. 17-
பேசின்பாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழைய புளியந்தோப்பு ஆர்.டி.ஓ.,அலுவலகம் அருகே, நேற்று காலை கத்தியைக் காட்டி மிரட்டி, சிலர் வழிப்பறியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்படி, பேசின்பாலம் போலீசார் சம்பவ இடம் சென்று, புளியந்தோப்பைச் சேர்ந்த வினோத்குமார்,21, குணால், 20, ராகுல், 18, பிரவீன், 25, மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த 'ஆடு' முனுசாமி, 24, ஆகிய ஐவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

