/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அந்தமான் செல்ல மறுத்த பெண் தாமதமாக புறப்பட்ட விமானம்
/
அந்தமான் செல்ல மறுத்த பெண் தாமதமாக புறப்பட்ட விமானம்
அந்தமான் செல்ல மறுத்த பெண் தாமதமாக புறப்பட்ட விமானம்
அந்தமான் செல்ல மறுத்த பெண் தாமதமாக புறப்பட்ட விமானம்
ADDED : அக் 09, 2025 02:36 AM
சென்னை, அசென்னையில் இருந்து அந்தமான் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், 139 பயணியருடன் நேற்று காலை 10:45 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
விமானத்தில் பயணிக்க, அந்தமானை சேர்ந்த கல்பனா, 35 என்பவர், திருச்சியில் இருந்து வந்திருந்தார். அவரை வழியனுப்ப உறவினர்களும் வந்திருந்தனர்.
'டிக்கெட்' பரிசோதனை முடிந்து கல்பனா, 'போர்டிங் பாஸ்' வாங்கினார். கடைசி நேரத்தில், அந்தமான் செல்ல மறுத்தார்.
உறவினர்கள் கட்டாயப்படுத்தி, நுழைவாயலுக்கு அனுப்பினர். அங்கு, மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகளிடம், 'அந்தமான் செல்ல விருப்பம் இல்லை; வலுக்கட்டாயமாக அனுப்புகின்றனர்' என, கல்பனா கூறினார்.
இதையடுத்து, போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட்டை அதிகாரிகள் ரத்து செய்து, கல்பனாவை திருப்பி அனுப்பினர். அவர் உறவினர்களுடன் திருச்சி திரும்பினார்.
இதனால், அந்தமான் செல்ல இருந்த விமானம், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.