/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானங்களின் சேவை மழையால் பாதிப்பு
/
விமானங்களின் சேவை மழையால் பாதிப்பு
ADDED : அக் 06, 2025 02:59 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 3:00 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய, கனமழை பெய்தது.
இதனால், இலங்கையில் இருந்து 149 பயணியருடன், சென்னை வந்த 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக, தரையிறங்க முடியாமல், பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அதேபோல், டில்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னை வந்த விமானங்கள், தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.
மழை குறைந்த பின், விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.
சென்னையில் இருந்து அபுதாபி, மஸ்கட் மற்றும் டில்லி, மும்பை, ஹைதராபாத், துாத்துக்குடி, சீரடி உட்பட 10 புறப்பாடு விமான சேவையும், மழையால் தாமதமானது.
விமான தாமதம் குறித்து முறையாக அறிவிக்காததால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.