ADDED : அக் 16, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரியில் வெள்ளம் எதனால்?
வேளச்சேரி ஏரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயை இணைத்து, மூடு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் துார்வாரும் வகையில் நுழைவு எதுவும் அமைக்கவில்லை. இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அதில் இணைத்துள்ள வடிகால்கள் வழியாக வெள்ளம் பின்னோக்கி பாய்கிறது.
இதன் காரணமாக, டான்சிநகர், அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட தெருக்களில் வழக்கத்தைவிட அதிகமாக வெள்ளம் தேங்கியது. கழிப்பறை நிரம்பியதால், சிறுநீர் கழிக்கக்கூட மிகவும் சிரமப்பட்டனர்.