/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள நீர் அளவை கணிக்க முடியாது நீர்வளத்துறை கைவிரிப்பு
/
வெள்ள நீர் அளவை கணிக்க முடியாது நீர்வளத்துறை கைவிரிப்பு
வெள்ள நீர் அளவை கணிக்க முடியாது நீர்வளத்துறை கைவிரிப்பு
வெள்ள நீர் அளவை கணிக்க முடியாது நீர்வளத்துறை கைவிரிப்பு
ADDED : டிச 03, 2025 05:19 AM
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் அருகே உற்பத்தியாகும் அடையாறு ஆறு, 42.5 கி.மீ., பயணித்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே வங்ககடலில் கலக்கிறது.
இந்த ஆற்றின் வழியாக வினாடிக்கு 39,000 கனஅடி நீரை கடத்த முடியும். கடந்த 2005ல் அதிகபட்சமாக 55,000 கனஅடி நீர் அடையாறு ஆற்றின் வழியாக வெளியேறி, பல இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளியேறும் நீரின் அளவை கண்டறிய கோரிக்கை எழுந்தது.
ஆனாலும், அடையாறு ஆற்றின் வழியாக எவ்வளவு நீர் வெளியேறுகிறது என்பதை கண்காணிப்பதற்கு பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் எந்தவிதமான அளவுகோலையும் நீர்வளத்துறை வைக்கவில்லை.
ஆனால், இவ்வளவு நீர் வெளியேறியது என குத்துமதிப்பாக வெள்ளக்காலங்களில் கணக்கு காட்டப்பட்டு வருகிறது.
அடையாறு ஆறு பராமரிப்புக்கு பல கோடி ரூபாயை செலவழிக்கும் நீர்வளத்துறையினர், வெளியேறும் நீரை கண்காணிக்க எந்த ஏற்பாடுகளையும் செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்காலத்தில் வெளியேறும் நீரின் அளவை கணிக்க முடியாததால், சேதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

