/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாழ்வாக அமைத்த வடிகால்வாயால் புழுதிவாக்கத்தில் வெள்ள பாதிப்பு
/
தாழ்வாக அமைத்த வடிகால்வாயால் புழுதிவாக்கத்தில் வெள்ள பாதிப்பு
தாழ்வாக அமைத்த வடிகால்வாயால் புழுதிவாக்கத்தில் வெள்ள பாதிப்பு
தாழ்வாக அமைத்த வடிகால்வாயால் புழுதிவாக்கத்தில் வெள்ள பாதிப்பு
ADDED : ஜூன் 23, 2025 03:46 AM

புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், 186வது வார்டு புழுதிவாக்கத்தில் வீராங்கல் ஓடை செல்கிறது. அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீர் இணைப்பு வடிகால்வாய், ஓடையின் மட்டத்தைவிட தாழ்வாக உள்ளது.
அதனால், வீராங்கல் ஓடையில் செல்லும் மழைநீர், வடிகால்வாயின் வாயிலாக திரும்பி, அப்பகுதியை வெள்ளம் மூழ்கடிக்கும் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வீராங்கல் ஓடையின் உயரத்தை சரியாக கணக்கிடாமல், வடிகால்வாயை தாழ்வாக இணைத்துள்ளனர். இதனால், கடந்த பருவமழையின் போது, மழைநீர் வெளியேறுவதற்கு மாறாக, ஓடையில் வரும் நீர் ஊருக்குள் திரும்பியது. அதை தடுக்க, தற்போது நான்கு இடங்களில் ஷட்டர் அமைத்துள்ளனர்.
அதற்கு மாற்றாக, ஆர்.டி.எஸ்., சாலையின் இருபுறமும் அமைந்துள்ள வீராங்கல் ஓடையின் இணைப்பு பகுதியின் குறுக்கே, தடுப்பு சுவர் அமைத்து மூட வேண்டும்.
ஏனெனில், வடக்கிலிருந்து வரும் நீர், சாலையின் தெற்கில் அமைந்துள்ள ஓடையில் கலப்பதால், நீர் மட்டம் விரைவாக உயர்ந்து, புழுதிவாக்கம் பகுதியில் சேகரமாகும் மழைநீர் வெளியேறுவதில் தடங்கல் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட இணைப்பை துண்டித்து, வடிகால்வாய் இணைப்பு பகுதியில் ஓடையை ஆழப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

